ஆடியோ உலகத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
இசை என்ன? Frequency என்றால் என்ன? Bass, midrange, treble — இவை இசையில் என்ன செய்கின்றன என்பதை கேட்டு புரிந்துகொள்ளலாம்.
இசை என்றால் என்ன?
ஒழுங்காக அமைந்த ஒலி, rhythm, melody, harmony போன்ற கூறுகள் சேர்ந்து நமக்கு ஒரு இசை அனுபவத்தை உருவாக்குகின்றன. இசை கேட்பது அறிவியல் மட்டும் அல்ல — அது உணர்வும் கூட.
ஒரு பாடலை ரசிக்கும்போது bass மட்டும் அல்லாமல் குரல், கருவிகள், rhythm, space, softness, brightness போன்ற பல விஷயங்களை நம்மால் உணர முடியும்.
இசையை எப்படி ரசிப்பது?
ஒரு நல்ல listening habit என்றால் “volume-ஐ அதிகமாக்கி எல்லாவற்றையும் கேட்பது” அல்ல. குறைந்த அல்லது வசதியான volume-ல், பாடலில் ஒவ்வொரு layer-ஐ கவனித்து கேட்பது.
பாடலின் overall feeling-ஐ மட்டும் கவனியுங்கள்.
Bass, guitar, flute, drums, vocals என்று ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள learning demos மூலம் அந்த sound எங்கு இருக்கிறது என்பதை கேளுங்கள்.
Frequency-ஐ தெரிந்துகொள்ளுங்கள்.
Hz என்பது ஒரு வினாடியில் ஒரு sound vibration எத்தனை முறை நிகழ்கிறது என்பதைச் சொல்லும் அளவு. கீழே ஒவ்வொரு range-ஐ திறந்து, தனித்தனி sound examples-ஐ கேளுங்கள்.
20–60 Hz — Sub-bass
Click to openஅதிக ஆழம். பெரிய kick impact, cinematic rumble, deep synth போன்ற “கீழே இருந்து வரும்” உணர்வு.
60–120 Hz — Bass foundation
Click to openBass guitar மற்றும் kick-ன் body இங்கே அதிகம் உணரப்படும். அதிகமாக இருந்தால் sound boomy ஆகலாம்.
120–250 Hz — Warmth / body
Click to openVocals, guitar, cello, piano போன்றவற்றுக்கு body மற்றும் warmth கிடைக்கும்.
250–500 Hz — Lower mids
Click to openHarmonium, flute, piano, guitar போன்றவற்றின் main body இங்கே வரும்.
500 Hz–1 kHz — Midrange
Click to openபல instruments மற்றும் vocals-ன் முக்கியமான பகுதி. இதை அதிகம் குறைத்தால் sound hollow ஆகலாம்.
1–2 kHz — Presence
Click to openVocals மற்றும் melodic instruments clearer/forward ஆக கேட்கும் பகுதி.
2–4 kHz — Clarity
Click to openSpeech/vocals மற்றும் attack தெளிவாகத் தோன்ற உதவும். அதிகமாக இருந்தால் harsh ஆகலாம்.
4–8 kHz — Detail / attack
Click to openSnare, guitar pick, cymbal attack, consonants போன்ற sharp details.
8–16 kHz — Air / sparkle
Click to openCymbal shimmer, flute breath, “air” போன்ற high-frequency feel.
16–20 kHz — Very high treble
Click to openபலருக்கு இந்த range-ல் hearing குறைவாக இருக்கும். “Air” sensation பற்றிய learning demo.